ஊக்கம் தருவோம்
சிறுபிள்ளை செய்யும் சிறிய செயலை
ஊக்கம் தந்து ஊக்குவிப்போம்
பலவித திறமை அவர்கள் உள்ளே
இருப்பதை நாம் வெளிகொனர்வோம் ......
சிறுசிறு முயற்ச்சி செய்த போதும்
சிறப்பாய் நாமும் ஊக்குவிப்போம்
பலவித சாதனை அவர்கள் செய்ய
பக்கபலமாய் நாமமும் நிற்ப்போம் ......
கொடிகள் படரும் கம்பினை போல்தான்
ஊக்கம் மனிதர்க்கு உதவிடுமே
உச்சம் அதனை அதனை எட்டிடவே
ஊக்கம் எவர்க்கும் அவசியமே ......
நமது அனுபவம் நாளும் தந்து
நாளும் அறிவினை நாம் வளர்ப்போம்
நண்பனைப்போல நாம் இருந்து
நாளும் வளர தோல் கொடுப்போம் .....
பிறக்கும் போதே மனிதர் எவரும்
திறமை கொண்டு பிறப்பதில்லை
வளரும் விதத்தில் வாய்ப்பு கிடைத்து
வளர்ச்சி பெற்றிட மறந்ததில்லை .....
பெற்றோர் கடமை ஊக்கம் தந்து
ஊக்குவிப்பதே பெரும் கடமை
ஊக்கம் ஒன்றே மனிதர் பலரை
தூக்கி நிறுத்தும் உயர் நிலையில் ......