விடைபெறுகிறேன் கல்லூரியே

கண்களில் ஆயிரம் கனவுகள் சுமந்து
கல்லூரி வாசலில் காலெடுத்து வைத்தவர்கள்!

வகுப்பறை என்னும் வானத்திலே
தினம் தினம் மின்னும் நட்சத்திரங்கள்!

நட்புக்கொரு சோகம் என்றால்
உயிரைக்கூட தருவதற்கு நண்பர்க்கூட்டம்!

கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்தாலும்
கிடைக்குமா இந்த மலர்கள் தோட்டம் !

கல்லூரி விழா கலை விழா எதுவானாலும்
ஆடிப்பாடி சிறகடிக்கும் வண்ணத்துப்பூட்சிகள்!

இன்று காணும் விழா ஒன்றில்
சிறகடிக்க எண்ணமில்லை
நெஞ்சமெங்கும் குத்திடும் ஊசிகள்!

பழகிய நாட்கள் எல்லாம்
அழகிய அனுபவங்கள்!

விழக வேண்டிய நேரமிது
அழ கூட சக்தியில்லை இதயத்திலே!

இதயத்தின் சுமைகளெல்லாம்
கண்ணீரோடு கரைகிறது!

நட்பின் அவஸ்த்தை இன்று
அனைவரின் முகத்திலும் தெரிகிறது!

சிறகடித்துப் பறந்த கல்லூரி வளாகம்
இன்று கண்ணீரோடு வழியனுப்புகிறது!

உடல்களால் மட்டுமே பிரிகின்றனர்
நட்பு என்பது அழியாது என்றும் அறிகின்றனர்!

இன்று கண்ணீரோடு விடைபெறும் உள்ளங்கள்
நாளை கண்ணியமாய் உயர்ந்து நிற்கும்
சிகரங்களாக!!

எழுதியவர் : பாரதி செந்தில்குமார் (27-Mar-14, 6:54 pm)
சேர்த்தது : செந்தில்குமார்
பார்வை : 216

மேலே