அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாள்

அம்மாவின் அன்பு
பாசத்தை தெரிவிக்கும்!
அப்பாவின் அன்பு
அறிவை அறிவிக்கும்!
சகோதரனின் அன்பு
தைரியத்தை வரவைக்கும்!
சகோதரியின் அன்பு
நட்பை புரியவைக்கும்!
உறவினரின் அன்பு
தெளிவை உணரவைக்கும்!
எதிரியின் அன்பு
தர்மத்தை எடுத்தியம்பும்!
நண்பனின் அன்பு
நம்மை நமக்கே சொல்லிக்கொடுக்கும்!
அயலவரின் அன்பு
அவசரத்தை காட்டிநிக்கும்!
காதலியின் அன்பு
கண்ணீரை மறக்கவைக்கும்!
மனைவியின் அன்பு
வெற்றித்துனையை சேர்த்துவைக்கும்!
குழந்தையின் அன்பு
கவலையை துறக்கவைக்கும்!
இயற்கையின் அன்பு
கற்பனையை தூண்டிநிற்கும்!
மிருகங்களின் அன்பு
தனிமையை விலக்கிவைக்கும்!
இறைவனின் அன்பு
மன்னிப்பை உரைத்துநிக்கும்!
மானிடா!
நீமட்டும் நவயுக மனிதனாய் மாறலாம்
அன்பு என்றுமே மாறாது!
கேட்டு போராட அது
பிறப்புரிமைகிடயாது!
கொடுத்துப்பாருதானாக கிடைக்கும்!

எழுதியவர் : TP Thanesh (27-Mar-14, 11:10 pm)
பார்வை : 162

மேலே