வழிக்கதவின் முன்பாக - பொள்ளாச்சி அபி

எனது வீட்டின் முன்னுள்ள
வழிக்கதவின் முன்பாக
வாகனங்களை நிறுத்தாதீர்..!
எத்தனை முறைதான் சொல்வது.?

எப்போது பார்த்தாலும்
கறுப்பு,நீலம்,சிவப்பென
பல வண்ணங்களில்
உங்கள்
இருசக்கர,நான்கு சக்கர
வாகனங்கள்,
மனிதர்கள் நுழையமுடியாதபடி
நின்று கொண்டேயிருக்கின்றன.

வழியை அடைத்து
இவை நிற்பதைக்
காணும்போதெல்லாம்
எனக்கு
கோபம்,கோபமாய் வருகிறது.

உங்களை எச்சரிப்பதற்காக
அறிவிப்பு பலகை வைத்தும்
பொருட்படுத்தும் அறிவென்பது
உமக்கில்லை..!

உண்பதற்கோ,
உடுப்பதற்கோ,
ஏதேனும் கிடைக்குமென்ற
நம்பிக்கையுடன்
என்வீடு தேடிவரும்
பார்வையற்றவருக்கும்
உழைக்க முடியாதவருக்கும்
உங்கள் வாகனங்கள்
இடையூறாய் இருக்கிறது.!

தயவு செய்து
வழிக்கதவின் முன்பாக
வாகனங்களை நிறுத்தாதீர்..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (28-Mar-14, 2:56 pm)
பார்வை : 144

மேலே