கல்லூரியின் கடைசி நாள்

உள்ளே நுழையும் பொழுது
தனி ஓர் ஆள்தான் நான்....
வெளியே செல்லும் போதும்
தனி ஓர் ஆள்தான் நான்....
உள்ளே இருக்கும் பொழுதுதான்
நீயும் நானும் இணைந்து
நாம் ஆனோம்....
இப்பொழுது நம்மிடமிருந்து நீயும் நானும்
பிரிந்துச் செல்கிறோம்...
தனிமை நம்மை வாட்டத்
தயாராக உள்ளது....
வருந்தாதே!
அது வெறும் பிரமை...
இரு திங்களுக்குள்
என் நினைவு உன்னுள்ளும்
உன் நினைவு என்னுள்ளும்
மாய்ந்து போகும்....
ஆனால்,
நினைவுநாள் போல
அவ்வப்பொழுது வந்து நினைவூட்டும் நமக்கு......
பள்ளி மாணவர்களைப் பார்க்கும் பொழுதும்...
கல்லுரி மாணவர்களைப் பார்க்கும் பொழுதும்...
நாம் நின்று பேசிய இடங்களைக்
கடந்து செல்லும் பொழுதும்...
இப்படிப் பல பொழுதுகளில் நம்மைக்
கடந்த காலத்திற்கு இழுத்துச் செல்லும்
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது...
நாமும் மாறிக்கொள்வோம் வா
மாற்றத்திற்கு ஏற்றாற்போல்......
என் கையொப்பம் ஒன்றே
உனக்கு ஆறுதலாய் இருக்கும்
நீ கண்ணீர் சிந்தும் தருணங்களில்......