மறந்ததாய் இடறிய மருக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
மறந்ததாய் இடறிய "மரு"க்கள்
தகர்ந்து தகர்ந்து
ஓரமாய்த்தங்கிய உருவங்களெல்லாம்
மாற்றங் காண்பித்து தூரஞ்செல்கின்றது
ஒட்டிக்கொள்ளும் ஸ்திதியில்
ஒவ்வொரு உருவமும்
போட்டாபோட்டியிட்ட
காலங்களின்று காணாமற்போனது
புதிய ஸ்திதிகளையினி
அனுமதிக்காத நோக்குடன்
திவ்யப் பயணத்திற்குத்தயாரானபடி
ஒட்டிநின்ற உருவத்தினோடுசேர்ந்து
மேலேமேலே பறக்கலானது அம்மனப்பறவை
அதுவே என நிர்ணயித்தநொடியில்
உடைப்படுகிறது
அன்றைய கற்பனைக் கடிவாளம்
"பகுதியான கடற்புறத்தின்
மேலேயும் கீழேயும்
மேடுபள்ளத்தோடுகூடிய
இரு கரங்களின் குவியலின்
இடர்சரசரப்பின் கோடுகளினூடே
சுமைசுமையாய் விலாசம் மறந்த
கிறுக்கல்களின் பிறப்பிடமும்
கூடச்சுற்றிக்கழிவதால்
சுவடுகள்மறந்த இருப்பிடமும்"
நேரேபிரிகிரதாகக்கண்ட
கூட்டுப்பிளவுக்கனவொன்றின்
அவஸ்த்தைகள் கூடக்கூட
இராகச்சந்திரன் எழில் மறைகின்றான்
இரண்டுமே காணாத இடைமறைவில்
இகம்பரசுகந்த தியானமிழக்கின்ற "மரு"விழிகள்
மருகியப்படியே துக்கிக்கின்றது
அடைப்படும் குப்பிகளின்மீது
வாசனாதி திரவங்களின் காதல்போல
உயிர்சுமந்த தேகங்கள்
மோகந்தீராதிருக்க நோற்கின்றது
ஆயுளிழக்கின்ற கவலைதனைச்சுமந்தாலும்
காலாவதியாகின்ற கடைசிநேரம்வரை
இணைப்பிரியா பந்தங்களாகிட
அனுசரன்