எழு சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்ஒரு குறிப்பு 05

எழு சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் ‘நான்கு விளமும், மூன்று மாவும் ஓரடியில் நடக்க,இரண்டு, நான்கு ஏழு என்ற இடங்களில் மாச்சீரும் பிறவற்றில் விளமும் வரும்’ என்று அறியவருகிறோம்.

வாய்பாடு 10 ------------
------------------------ விளம் மா விளம் மா
--------------------------------விளம் விளம் மா .......................என்றவாறாக

ஓரடியின் முதன், மூன்று, ஐந்து, ஆறு ஆகிய நான்கு சீர்களும்
விளாச் சீரிலும், இரண்டு,நான்கு, ஏழு ஆகிய மூன்று சீர்களும் மாச்சீரிலும் முடியும்படியாக அமைந்து வருவது:
எ-டு : [1]
நலிதரு சிறிய தெய்வமென் றையோ
==நம்முடைத் தொண்டரும் நிற்பார்!
பலிதர வந்த பன்றிகள் கோழி
==பலிகடா போன்றுமே மக்கள்!
பொலிவுற வந்த சுதந்திரம் தன்னைப்
==புரிந்திட எண்ணுவார் இன்றி
இலவசம் பெற்றே இளிச்சவா யினராய்
==இன்னுமே இருப்பதில் நோவேன்!

இராமலிங்க சுவாமிகளின் ஆறாந்திருமுறைப் பாடல் ஒன்றினைப் படித்த பொழுது நானெழுதிய விருத்தம் இது.
ஓரடியில், முதல், மூன்று, அய்ந்து, ஆறு ஆகிய நான்கு சீர்களும் விளச்சீர்களாகவும்,இரண்டு, நான்கு, ஏழு ஆகிய மூன்று சீர்களும் மாச்சீர்களாகவும் அமைந்து, மோனை முதற் சீரிலும் அய்ந்தாம் சீரிலும் தவறாமல் வந்துள்ளதை நோக்குக.

எ-டு : [2]
வாய்பாடு: -------விளம் மா விளம் மா
--------------------------விளம் மா காய்
என்று முதலடியில் முதலாவது, மூன்றாவது, ஆனதாவது சீர்களில் விளச் சீர்களும், இரண்டாவது நான்காவது, ஆறாவது சீர்களில் மாச் சீர்களும், ஏழாவது சீர் காய்ச்சீராகவும் அமைந்து வரும் ஒரு பாடல் [இதே தளத்தின் திருமதி சியாமளா ராஜசேகர் அவர்கள் பதிந்த= பாடலில் ஒரு திருந்திய வடிவம்] கீழே கொடுக்கப்படுகிறது.

முழு/மதி/ ஒளி/யில்/ நதிக்/கரை/ மண/லில்/
------/விளம் --------/ மா -----------/விளம் -------/ மா
=====முகங்/களைப்/ பார்த்/துக்/ களித்/தோ/மே/...!!
-----------------/விளம் ------------/மா ------------------/காய்
தழு/விடும்/ காற்/றில்/ உட/லது/ சிலிர்க்/கத்/
-------/விளம் -------/ மா ----------/விளம்-----------/ மா
=====தமை/மறந்/ தவ/ராய்/ லயித்/தோ/மே/....!!
-----------------/விளம் ------/ மா --------------------/ காய்
பொழு/துகள்/ புல/ரும்/ வை/கறை/ ஒளி/யில்/
----------/விளம் -----/ மா ---------/ விளம் ------/ மா
=====புது/வுல/ கினி/லே மிதந்/தோ/மே!/.!!
--------------/விளம் -----/மா -----------------/காய்
நழு/விடும்/ துகி/லில்/ முழு/மதி/ வா/னில்/
------/விளம் -------/ மா ----------/ விளம் ---/மா
===== நடப்/பதை/ எண்/ணி/ ரசித்/தோ/மே!!
----------------/விளம் --------/ மா ---------------/ காய்

===== இன்னும் வரும் ======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (29-Mar-14, 9:16 am)
பார்வை : 131

மேலே