என் தலைவா
எனையாளும் தென்னவனே
தீந்தமிழால் நெஞ்சை
அள்ளிக்கொண்டவனே
நான் விண்ணைத்தொட்டது
உனை சுட்டு விட்டதோ
கலங்காதே என்னவனே
மண்ணும் தின்று விடலாம் தேகம்
என் ஆன்மாவை மறைத்து விடுமா மேகம்
உன்னோடு வருவேன் நாளும்
யாரும் காணாது எப்போதும்
இருப்பேன் என்றும் துணையாக
காப்பேன் கண்ணின் இமைபோல
வருந்தாதே என் தலைவா
தைக்கிறதே என் இறைவா
ஓர் துளி நீர் நீ உகுத்தாலும்
பாவியாகிடுவேன் என் நாதா
நீ வரும் வரை
விண்ணில் ரதம் ஏறும் வரை
உடன் வருவேன் எப்பொழுதும்
எனையாளும் தென்னவனே
தீந்தமிழால் நெஞ்சை
அள்ளிக்கொண்டவனே
நான் விண்ணைத்தொட்டது
உனை சுட்டு விட்டதோ
கலங்காதே என்னவனே
மண்ணும் தின்று விடலாம் தேகம்
என் ஆன்மாவை மறைத்து விடுமா மேகம்
உன்னோடு வருவேன் நாளும்
யாரும் காணாது எப்போதும்
இருப்பேன் என்றும் துணையாக
காப்பேன் கண்ணின் இமைபோல
வருந்தாதே என் தலைவா
தைக்கிறதே என் இறைவா
ஓர் துளி நீர் நீ உகுத்தாலும்
பாவியாகிடுவேன் என் நாதா
நீ வரும் வரை
விண்ணில் ரதம் ஏறும் வரை
உடன் வருவேன் எப்பொழுதும்
என் தலைவா