புரியாதா மானிடா

உன் பெற்றோர்
உன்னில்
பாசம் வைத்தால்
புரியாது!

உன் சகோதரம்
உன்னில்
பாசம் வைத்தால்
புரியாது!

உன் மனைவி
உன்னில்
பாசம் வைத்தால்
புரியாது!

உன் பிள்ளை
காதல் கொண்டால்
பிரித்துவிடுவாய்
புரியாது!

உன் நண்பனுக்கே
துரோகம் செய்வாய்
நட்பின் ஆழம்
புரியாது!

இறைவன்
இருக்கிறான் என்று
என்றென்றும்
புரியாது!

மானிடா!

அத்தனை பாசமும்
புரியாத உனக்கு
திரையில் வரும்
பாசம் மட்டும்
புரிகிறதே
எவ்வாறு!

எழுதியவர் : TP Thanesh (29-Mar-14, 11:57 pm)
பார்வை : 96

மேலே