மௌனம் கலைத்து வா

கொள்ளும் மௌனம்
கொல்லுதே கண்ணே
துள்ளும் இளமை
போய்த்தள்ளுதே முதுமை
இருந்தால் செழுமை
நீங்கினால் வெறுமை
வேண்டாம் இந்நிலைமை
தினம் செய்திடுவோம் புதுமை
அன்பினால் வளமை
இனித்திடுமே நாளும்
இணைந்தே செல்வோம் நாமும்
உனக்காகவே நானடி
மௌனமும் கலைப்பாயடி
அடி எடுத்தேன் உனை நாடி
அடி என்றேன்
உரிமையில் நீ எனை சேர
நீ அடித்தாலும் வலிக்காது
என் வாழ்விற்கும் அடி நீயல்லவோ

அடிக்க வா
அணைக்க வா
மௌனம் கலைத்து வா

எழுதியவர் : av (29-Mar-14, 10:02 pm)
சேர்த்தது : gokul kannan
பார்வை : 70

மேலே