இந்த பகடையில்

நட்பையும்,

காதலையும்,

ஒரே திசையில்

உருட்டுவதால்

வெட்டு படுவது

நட்பு என்ற

புனிதம்,


இரண்டும்,

பாலின

வேறுபாட்டால்

திணறுகின்றன,

பாலினம் ஒன்றாகில்,

நட்பென்றும்,

எதிரெதிர் எனில்,

காதலென்றும்

வகுப்பதால்

வந்த வினையில்

நட்பே பலியாகிறது,

எழுதியவர் : சபிரம் சபிரா (30-Mar-14, 1:38 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 34

மேலே