கணவனை கொடுமை செய்தால்- பக்தி கதைகள்
கணவனை கொடுமை செய்தால்
--------------------------------------------------
மனை காட்டுக்கு அனுப்ப காரணமாக இருந்தவள் கைகேயி. இவள் நற்குலத்தில் பிறந்து,நற்குணவானான தசரதரை மணந்து, நல்ல மகனைப் பெற்ற பிறகும், இவளது செய்கையால் பூவும், பொட்டும்பறிபோயிற்று. இந்த புத்திஇவளுக்கு எப்படி வந்தது தெரியுமா?கலகா....பெயருக்கேற்ற பொருத்தம் இந்த பெண்மணிக்கு. ஊரிலோ, வீட்டிலோ ஏதாவது தகராறு என்றால் கலகா அங்கே இருப்பாள். பெரும் கர்வம் பிடித்தவள். தன்கணவர் பிட்சுவை புழுவுக்கும் கீழாக மதிப்பாள்.நல்ல உணவுகூட கொடுக்கமாட்டாள்.
துணி துவைத்து கொடுக்கமாட்டாள். அதே நேரம் அவள் ருசியாக சமைத்து சாப்பிடுவாள். மனைவியால் பிட்சுவுக்கு பெரும் துன்பமே ஏற்பட்டது.பிட்சுவுக்கு ரகுவரன் என்ற நண்பர் இருந்தார்., அவர்பிட்சுவிடம் உன்மனைவியைத் திருத்த வழி இருக்கிறது. நீ என்னசொன்னாலும் அவள்நேர்மாறான காரியங்களையே செய்கிறாள். எனவே நீ என்ன விரும்புகிறாயோ, அதற்கு நேர்மாறாக உன் மனைவியிடம் சொல்.
உன் காரியம் நிறைவேறிவிடும் என்றார்.பிட்சுவுக்கும் அந்த யோசனை பிடித்துப்போனது. ஒருமுறை தனது நண்பனுக்குவிருந்தளிக்க வேண்டிய அவசியம் பிட்சுவுக்கு ஏற்பட்டது. மனைவி இதை விரும்பமாட்டாள் என்பதை உணர்ந்த பிட்சு, கலகா, என் நண்பன் பெரிய அயோக்கியன். அவன் இங்கு வந்திருக்கிறான். அவனுக்கு தண்ணீர் கூட கொடுக்காதே.
அவனாகவே திரும்பிபோய்விடுவான், என்றார்.கலகாவுக்கு கோபம் வந்துவிட்டது. இப்படியா செய்வீர்கள்? வீட்டுக்கு வந்தவரை சாப்பிட சொல்லாமல் அனுப்புவது தர்மமாகுமா? அவர் ஒன்றும் மோசமானவராக தெரியவில்லையே! அவருக்கு சாதாரசாப்பாடாக இல்லாமல் பெரிய விருந்தே வைக்கப்போகிறேன், என சொல்லி விருந்துக்கு ஏற்பாடு செய்தாள்.பிட்சுவின் தகப்பனாருக்கு திதி கொடுக்க வேண்டிய நாள் வந்தது. மாமனாரை கலகாவுக்கு பிடிக்காது.
எனவே திதி கொடுக்க விடமாட்டாள் என்பதை அறிந்த பிட்சு கலகாவிடம், இந்த ஆண்டு என் தந்தைக்கு நான் திதி கொடுக்கமாட்டேன். நீயும் வீட்டில் எந்த பலகாரமும் செய்யாதே, என்றார்.கலகாவிற்கு ஆத்திரமாக வந்தது. பெற்ற தந்தைக்கு திதி கொடுக்காத உம்மைப் போன்றவர்களால் தான், நாட்டில் மழையே இல்லை. இந்த ஆண்டு கண்டிப்பாக திதி கொடுக்க வேண்டும், என்றாள்.
பிட்சு நினைத்தபடியே திவசம் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஆனால், இது கடைசிவரை சாத்தியமாகவில்லை. சில மாதங்களில் கலகாவுக்கு உண்மை தெரிந்துவிட்டது. அவள் கடுமையாக சண்டை போட்டாள். எனவே பிட்சு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். விஷயம் அறிந்த கலகா, தற்கொலை செய்து கொண்டாள்.பேயாக அலைந்த கலகாவை, எமதூதர்கள் எமதர்மராஜாவிடம் கூட்டிச்சென்றனர்.
சித்ரகுப்தர், கலகா செய்த பாவங்களை அடுக்கினார்.கணவனுக்கு அடங்காத இவள் காலம்பூராவும் பேயின் உருவம் தாங்கியேஅலையட்டும், என எமன் தீர்ப்பளித்தார்.எமதூதர்கள் கலகாவை வானிலிருந்து தூக்கி வீசினர். அவள் ஒருநதிக்கரையில் வந்து விழுந்தாள். அங்கிருந்த மக்களெல்லாம் அவளது உருவத்தைப் பார்த்து பயந்து ஓடினர். அப்போது தர்மதத்தர் என்ற அந்தணர் அங்கு வந்தார்.
பேயை விரட்டுவதற்கான மந்திரங்களை மனதிற்குள் ஓதினார். ஆனாலும் பேய்அடங்கவில்லை. அவர் அருகிலிருந்த சிவன் கோயிலுக்குள் சென்றார். தீபத்தட்டை எடுத்து கற்பூரம் கொளுத்தி அதை பேய் மீது வீசினார். பேயின் உடல் தீப்பற்றிக் கொண்டது. பின், தீர்த்தச் செம்பை பேயின் மீது வீசினார்.தீர்த்த செம்பிலிருந்த தண்ணீர் பேயின்உடலில் பட்டதும், தீ அணைந்ததுடன், பேய் உருவமும் மாறியது. அது அழகான பெண்ணாக வடிவெடுத்தது.அவள் தன் முற்பிறவி வரலாறைதர்மதத்தரிடம் கூறினாள். தர்மதத்தர் அதைக் கேட்டு பரிதாபப்பட்டார்.
அப்போதுஎமதூதர்கள் அங்கு வந்தனர்.பேயாக திரிந்த இவள், சிவனுக்குரியகற்பூரமும், தீர்த்தமும் பட்டதால் பாவங்கள் குறையப் பெற்றாள். ஆனாலும், கணவனை மதிக்காத இவள், அடுத்த பிறவியிலும் ஒரு கெட்ட பெயரை ஏற்பாள். தர்மதத்தரானஉமக்கு இப்போது இரண்டு மனைவியர்இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த பிறவியில் கோசலை, சுமித்திரை என்ற பெயரில் உம்மை கணவனாக அடைவார்கள்.
உம்மால் பாவ மன்னிப்பு பெற்ற இந்தப் பெண், கைகேயி என்ற பெயருடன் உம்மை கணவராகஅடைவாள், என்றனர்.அடுத்த பிறவியில் தர்மதத்தர், தசரதமகாராஜாவாக பிறந்தார். கலகா, கைகேயி என்ற பெயரில் பிறந்து அவரை மனைவியாக அடைந்தாள். மந்தரை என்ற தீய பெண்ணுடன் சேர்ந்து, ராமனை காட்டுக்கு அனுப்பகாரணமானாள்.அதனால், இன்றும்அழியாத கெட்ட பெயரைசுமக்கிறாள்.
கணவனும்மனைவியும் அனுசரணையாக நடக்க வேண்டும் என்பதேகைகேயியின் வாழ்க்கை உலகுக்குகற்றுத் தரும் பாடம்.
நன்றி ; தின மலர்