எங்கே..?

பள்ளி முடிந்து, சீருடை களைந்ததும்,
நண்பன் முகம் தவிர வேறேது ?
இரு சக்கரம் ஏறி..
இரு தெருக்கள் தாண்டி..அவனை காணும் வரை..!!

எப்படி மறக்கும், அவன் முகம்..?!
காலம் கடந்து, கல்லூரி முடித்து..,
சூரியக்கீற்றுக்கள் அடியில்,
சூடான "டீ" -ன் மௌனத்தில்..வாழ்க்கையின்,
எதிர்காலத்தை கனவு காணும் பொழுது..!!

கால சக்கரத்தில்..சிக்கிக் கொண்டு,
தொலைந்து போன முகவரியில்.., முழுதாக
இன்றுவரை காணவில்லை அவன்..!

எப்படி மறக்கும் அவன் முகம்..??

எழுதியவர் : ராஜி.. (22-Feb-11, 12:13 am)
சேர்த்தது : npsrajan
பார்வை : 536

மேலே