பிரேமிகவரதா எச்சொல்லால் தானிங்கு வடிப்பரோ
பிரேமிகவரதா எச்சொல்லால் தானிங்கு வடிப்பரோ
பிரேமிகவரதா நின்திருமுகம் தருமுணர்வை
பிரேமிகவரதா திருமுகம்தரும் ஒரு உணர்வை
ஒரேபதம்வராதோ உணர்த்தவே அத்தனி உணர்வை
பிரேமிகவரதா எச்சொல்லால் தானிங்கு வடிப்பரோ
*****************************************************************************
பிரேமிகவரதா எச்சொல்லால் தானிங்கு வடிப்பரோ
கள்ளசிரிப்பை பூக்கும் இதழ்கள் தருமுணர்வை
துணை நானென பார்க்கும் விழிகள் தருமுணர்வை
பிரேமிகவரதா எச்சொல்லால் தானிங்கு வடிப்பரோ
*****************************************************************************இதிகாசம் புரானமென்று மேலோர் வடித்தாரே ?
உணர்வுகடந்த உணரவதென்று வேதநூலுணர்வை வடித்தாரே ?
ஒன்றென்று இரண்டென்று மேலோர் வடித்தாரே ?
நின்திருமுக தரிசனமேதரு இனியுணர்வை வடிப்பரோ ?
பிரேமிகவரதா எச்சொல்லால் தானிங்கு வடிப்பரோ
****************************************************************************
பிரேமிகவரதா எச்சொல்லால் தானிங்கு வடிப்பரோ
அர்ஜுனசோகம் போக்கும் கீதை தந்தாயே
உள்ளத்தின் தாகம் நீக்கும் குருமுகம் பூத்தாய்
ஒரேபதம் உரைப்பாயே உனக்கேயது சாத்தியமது தாயே
பிரேமிகவரதா எச்சொல்லால் தானிங்கு வடிப்பரோ
பிரேமிகவரதா நின் திருமுகம் தருமுணர்வை .........................