பள்ளித் துளி - கே-எஸ்-கலை

முன்பு கல்
இப்போது கள்
இளமையில் !
==
சரஸ்வதி பூசை
இனிச் சொல்லுங்கள்
இலட்சுமி பூசை !
==
குட் மோர்னிங் டீச்சர்
குட் மோர்னிங் - சிட் டவுன்
தமிழ் பாடம் தொடங்கியது !
==
மணியடித்த பின்
பிரிந்து போவர் மாணவர்
சமய பாடத்திற்கு !
==
ஐந்திலேயே
வளைக்கும்
புத்தகப்பை !