எங்கள் நட்பு

நீ இருந்தால்தான்
நான் இருப்பேன் என்றில்லை
நீ இல்லையென்றாலும்
நான் இருப்பேன்
கல்யாணவீட்டு பந்தியில்.......

நீ கொடுத்தால்தான்
நான் வாங்குவேன் என்றில்லை
நீ கொடுக்கும் முன்பே
நான் எடுத்திருப்பேன்
நீ கல்லூரிக்கு கொண்டுவந்த இனிப்பை....

நீ அழுதால்
நான் அழவே போவதில்லை மாறாக
நீ வெறுப்பேறி அழுகையை நிறுத்தும்வரை
நான் சிரித்தது கொண்டே இருப்பேன்...

என் நினைவுகளில் இன்னும்
நீ நண்பனாய் தான் இருக்கிறாய்
நாம் தூரமாய் இருந்தாலும்

நான் உன்னை அதிகமாய் திட்டியதில்லை என்றாலும்
நம் கைபேசியில் அழைப்பில்
திட்டுதலில் தான் தொடங்குகிறது
நம் உரையாடல்.....

என் காதலி வரும்போது என்னைபற்றி நீயும்
உன் காதலி வரும்போது உன்னைபற்றி நானும்
கேலியாக பேசுகிறோம்.....

ஒரே அணியில் எத்தனை முறை
நீயும் நானும் இணைத்து
மட்டை பந்து விளையாடி இருப்போம்....
ஒரு போட்டியில் கூட நீயும் நானும் இணைத்து நீண்ட நேரம் களத்தில் இருந்ததில்லை.
நீ அதை சிந்தித்தது உண்டா?

ஆனாலும் இன்னும் இணைந்து நண்பனாய் தான்
இருக்கிறோம்............

எழுதியவர் : கிளிப்போர்டு குமார் (1-Apr-14, 11:15 am)
Tanglish : engal natpu
பார்வை : 377

மேலே