பாவம் தலைவரு

பொதி சுமக்கும்
கழுதைக்குத் தெரியுமா?
பொதிக்குள் இருப்பது
பொக்கிஷமா அல்லது
பொக்கு வெடியான்னு?

எதை ஏற்றினாலும்
சுமப்பதே அதன் பணி
பஞ்சு மூட்டைகள்
ஏற்றிய கழுதைகள்
ஏரிக் கரைகளில் நின்று கொண்டு
தண்ணீரில் இறங்க மாட்டேன்
என்று அடம்பிடிப்பதில்லை..

சுவர்களில் பதித்திருக்கும்
தேர்தல் நேரத்து
விளம்பரங்களில்
இருட்டில் நின்று கொண்டு
ஒண்ணுக்கு அடிக்கும்
தொண்டன் அறிவதில்லை
சுவர் ஓவியத்தில்
தன் தலைவர் படம் என்று...!

நன்றி முகநூல் நண்பன்

எழுதியவர் : (31-Mar-14, 7:37 pm)
Tanglish : paavam thalaivaru
பார்வை : 107

மேலே