Samsathiyamani - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Samsathiyamani |
இடம் | : ரியாத்-சவுதி |
பிறந்த தேதி | : 19-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 141 |
புள்ளி | : 22 |
சொல்ல கூடிய அளவில் நான் பெரியவன் இல்லை.
தோழர்களே
தலை மகன் இல்லாது
தாய்மண் அழிகின்றதே
தலை மகனை அழைத்துவர
தளம் ஒன்று தேவை
தளத்தை நாம் உருவாக்க
தளராது போராடுகிறோம்
தாயக்கனவுடன் தளம்
வந்து அணி சேருங்கள்
நாசரிக்கும் ஆத்திரத்தில்
மூச்சமிழ்க்கும் வார்த்தைகள்
நாசத்தை ஏற்படுத்தி
நேசத்தை சீர்குலைக்கும் !
நா சத்தம் இழந்து விட்டால்
நம் சட்டம் ஜெயித்துவிடும்!
நாம் சத்தம் இழந்துவிட்டால்
நாடெல்லாம் நாறிவிடும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சோலைக் கரும்புகள்
ஆலையில் ஆட்டப்பட்டால்
எச்சூறும் வாய் போல
வார்த்தைக் கரும்புகள்
ஆட்டப்படும் ஆலை கூட
மயலாகிப் போயிருக்கும்!
புயலாக சுழன்றிருக்கும்!
மொழிச் சுவையின் உச்சம் கண்டு
ஆலை கூட அதிர்ந்தே மறத்திருக்கும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சீரிய வார்த்தைகளின்
காலடில்கள் கற்றுத்தரும்
ஆயிரங்கோடி அற்புதங்ளை
ஆணிவேர்த் தங்கங்களை
அள
கடலும் நிலவும்
விழியாலே கவிவடிக்கும்
உறங்கா இரவுகளில்.......
உயிர்முத்தங்களால் நிரப்பி
கண்ணீரிடம் சமர்பித்து சென்றவளின்
நினைவுகள் புரையோடிய
இன்றைய இவனின் நீள் இரவு.........!
கவலை தோய்ந்த மனதில்
பயமில்லை....உடலால் மறித்து
போன உருவொன்று அவனை
நெருங்கி நடைபோடுகையில்..........!
உலகின் விளிம்பில்
புத்தக அலமாரியொன்றின்
மூலையில் கச்சிதமாக வீற்றிருக்கும்
முன்பொரு புத்தகத்தால்
காதலிக்கப்பட்ட
பெயரில்லா
பதிப்புகளில்லா
புத்தகமென இன்றவன்......!
அழைக்கிறான்
அழுகிறான்
அலறுகிறான்
கதறுகிறான்
வெற்று பக்கங்களிலெல்லாம்
கண்ணீர் வழிகின்றது............!
தனிமையில் ஒரு பக
மகனே ,
உயில் எழுத
பணமில்லை ....
உயிர் என்
உடலிலிருந்து பிரிந்த பின்
சடலத்தை
சங்கு ஊதி
மலர் வளையமிட்டு
மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்க
சாம்பலை கரைக்க
சௌண்டி கழிக்க
செலவுகளுக்கு
சேமிப்பாய் ஒரு தொகையை
சிவப்பு பெட்டியில்
சேர்த்து வைத்து உள்ளேன்
மனம்
பணம் இல்லாமலே எரிந்து முடிந்தது
உடல் எரிய இத்தொகையை
உனக்காக சேமித்தேன் !
சொத்து சேர்த்து வைக்காததால்
செலவு வைக்காமல் செல்ல எண்ணுகின்றேன் !
தகனத்தில் கண்ணீர் விடாதே !
நெருப்பு அணைந்து விடும் .
வறுமையால்
பாரமாய் வாழ்ந்த உனக்கு
இறப்பிலாவது பெரும் பாரமில்லாமல்
பிரிய விரும்பி
வீசிய வலையில்
வீழ்ந்து விட்டாயே நந்தலாலா...!
விலைபேச முடியா
நட்பை விட்டாயோ நந்தலாலா...!
அகம் காணாமல்
பறந்து வந்தாய் நந்தலாலா..!
முகம் காணும் நேரம்
மறந்து சென்றாயோ நந்தலாலா..!
தேளாய் கொட்டிய
தேவன் நன்றா நந்தலாலா..!
தோளை கொடுத்த
தோழமை கொன்றா நந்தலாலா..!
ஒட்டிய நட்பில்
வெட்டியது ஏனோ நந்தலாலா..!
வெட்டியதும் குரல்
ஒட்டி முட்டியதேன் நந்தலாலா..!
வேகம் கண்டுதான்
மோகம் கொண்டேன் நந்தலாலா..!
நகம் போலென்னை
வெட்டி விட்டாயோ நந்தலாலா..!
விரலுக்கா? நகதுக்கா?
விடுதலை யாருக்கு நந்தலாலா..!
பகைமைக்கா? நட்புக்கா?
பதில் சொல்வாயோ நந்தலாலா..!
விடையறிய தவிக்கின்றேனுன்
எனக்கு பிடித்தது மௌனம்..
அதற்காக
என் காதலை ஏற்பதிலும்
மௌனமாக இருந்து விடாதே..!
பொதி சுமக்கும்
கழுதைக்குத் தெரியுமா?
பொதிக்குள் இருப்பது
பொக்கிஷமா அல்லது
பொக்கு வெடியான்னு?
எதை ஏற்றினாலும்
சுமப்பதே அதன் பணி
பஞ்சு மூட்டைகள்
ஏற்றிய கழுதைகள்
ஏரிக் கரைகளில் நின்று கொண்டு
தண்ணீரில் இறங்க மாட்டேன்
என்று அடம்பிடிப்பதில்லை..
சுவர்களில் பதித்திருக்கும்
தேர்தல் நேரத்து
விளம்பரங்களில்
இருட்டில் நின்று கொண்டு
ஒண்ணுக்கு அடிக்கும்
தொண்டன் அறிவதில்லை
சுவர் ஓவியத்தில்
தன் தலைவர் படம் என்று...!
நன்றி முகநூல் நண்பன்
நீ விழாமலே வாழ்ந்தாய் என்பதில் பெருமை இல்லை..!
விழுந்த போதெல்லாம் எழுந்தாய் என்பதே பெருமை..!