இரு சூரியன்கள் சந்தித்து கொண்டால்2-வித்யா

கடலும் நிலவும்
விழியாலே கவிவடிக்கும்
உறங்கா இரவுகளில்.......
உயிர்முத்தங்களால் நிரப்பி
கண்ணீரிடம் சமர்பித்து சென்றவளின்
நினைவுகள் புரையோடிய
இன்றைய இவனின் நீள் இரவு.........!

கவலை தோய்ந்த மனதில்
பயமில்லை....உடலால் மறித்து
போன உருவொன்று அவனை
நெருங்கி நடைபோடுகையில்..........!

உலகின் விளிம்பில்
புத்தக அலமாரியொன்றின்
மூலையில் கச்சிதமாக வீற்றிருக்கும்
முன்பொரு புத்தகத்தால்
காதலிக்கப்பட்ட
பெயரில்லா
பதிப்புகளில்லா
புத்தகமென இன்றவன்......!

அழைக்கிறான்
அழுகிறான்
அலறுகிறான்
கதறுகிறான்
வெற்று பக்கங்களிலெல்லாம்
கண்ணீர் வழிகின்றது............!

தனிமையில் ஒரு பக்கம்
இல்லாத மறுபக்கம்...........(நாணயம்)
வாசகர்களே.....
ஏன்
எதற்கு
எப்படி என்று கேட்கவேண்டாம்....!
என் அதிசய பிரபஞ்சத்தின்
ஒரு பக்க நாணயம்......இது........(கதாநாயகியின் முன்குறிப்பு......)

ஓரடியில் முடிந்துவிடும்
நீண்ட நெடும் நீர்சமவெளியில்
நீந்திக்கொண்டே இமைவிரித்து
எதை நோக்குகிராளிவள்..........?(கதாநாயகி)




-தொடரும்.

பி-கு:ஒரே அடியில் முடிந்துவிடும்
கடல்....

ஒரே ஒரு பக்கம் கொண்ட நாணயம்

இவையிரண்டும் கற்பனைக் கண்களால் மட்டும் பார்க்கவும்.

எழுதியவர் : வித்யா (3-Apr-14, 10:51 pm)
பார்வை : 110

மேலே