எனைப் பிரியும் தோழிக்கு
பாலை வனமாக காய்ந்தது என் மனம்
உன் அன்புக்கு ஏங்கி ஏங்கி
அன்பால் என் மனதை கடலாக்கிவிடு
என்னைப் பிரியாதே அன்புத் தோழி
முத்தென அள்ளி எடுப்பேன்
நீ சிந்தும் புன்னகையை
அம்முத்துக்களை மாலையாகக் கோர்த்து
சூடுகிறேன் நம் நினைவுகளுக்கு
மலையை விட உயர்ந்தது வானம்
அதில் கதிரவனாக நீ உதிப்பாய்
உன் ஒளியால் என்னை ஒளிரசெய்
என்னை மறவாதே அன்புத் தோழி
என் உயிர் பிரியும் நேரத்தில்
ஒரு குரலுக்கு ஏங்கும் என் இதயம்
என்னைப் பிரியாதே என்ற உன் குரலுக்குத்தான்
உன் பெயரைச் சொல்லி முடியும் என் இறுதித் துடிப்பு .