சரணாலயம்

இலக்கியப் பறவைகளுக்கு
எழுத்து வேடந் தாங்கல்
இதயப் பறவைகளுக்கு
காதல் வேடந் தாங்கல்
கற்பனைப் பறவைகளுக்கு
வானம் வேடந் தாங்கல்
கனவுப் பறவைகளுக்கு
மென்துயில் வேடந் தாங்கல்
அரசியல் பறவைகளுக்கு
வாக்காளர் மலர்த் தாள்கள்
தேர்தல் காலத்து
சரணாலயம் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Apr-14, 9:35 am)
பார்வை : 112

மேலே