சம சக்கரம்

நேருக்காக போர் தொடுப்பதில்
நியாயமில்லை பெண்ணே -நீ
நெஞ்சிலேந்திய கணவன் உன்
காலடியில் தான் கண்ணே !

இரண்டும் இணைந்து இயங்கித்தானே
சக்கரம் வண்டியை வழி நடத்தும்
இரண்டி லொன்று கழண்டு போனால்
வாழ்க்கைப் பயணம் நின்று போகும் !

கூரையை பிய்த்து கொடியை நட்டால்
யாருக்கு லாபம் ,யாருக்கு நட்டம் ?
தேரையாய் நீயும் கல்லுக்குள் வேண்டாம்
தேவதை நீயாய் கணவான் நெஞ்சில் !

உன் கையிலிருக்கும் ரேகை
உலகப் படத்தி லில்லையடி
உண்மை, இதை உணர்ந்தால் உனக்கு
துன்ப மேதும் இல்லையடி !

எழுதியவர் : படைகவி பாகருதன் (2-Apr-14, 10:15 am)
Tanglish : sama chakkaram
பார்வை : 75

மேலே