இளம் பெண்ணே
காசு பணம் இல்லையென்று
===கலங்காதே கண்ணே . அது ,
வாசமுள்ள மலரென்று நீ
===வாழ்ந்துகாட்டு, வரும்தன்னே !
சொத்து சுகம் இல்லையென்று
====சூம்பாதே கண்ணே . அது ,
பூத்துக் கனியாகும்படி நீ
====வாழ்ந்துகாட்டு ,வரும்தன்னே !
குளம் குட்டை கலங்கும்
====நீரோடை கலங்காது! கண்ணே
இளம்பருவம் நீர்வீழ்ச்சி,
====விழுந்தும் எழுந்தோடும் !
கலங்கிய நீரும் தெளியும்
====தெளிந்தால் அறிவு புலரும் .
விளங்கும்போது குவியும்
====வேண்டிய பொருள்க ளனைத்தும்!
அதனால் ,
காசு பண மில்லை என்று
கலங்காதே .............!