மரண வாக்குமூலம்

நாங்கள்
வெய்யிலைத் தாங்குகின்றோம்
நீங்கள் நிழல் பெறவே..
நாங்கள்
காய்கனிகளைக் கொடுக்கின்றோம்
நீங்கள் சுவைத்து உண்டிடவே ..
நாங்கள்
அசுத்தக்காற்றை சுவாசிக்கின்றோம்
நீங்கள்நன் மூச்சுப்பெற்றிடவே ..
வறட்சியை தாங்கியும் வாழ்கின்றோம்
நீங்கள் மழை பெறவே ..
பூவாக
பிஞ்சாக
காயாக
கனியாக
இலை,பட்டை,வேராக ..
நோய்தீர்க்கும் மருந்தாக
எங்கள் உடல் பொருள் அனைத்தையும்
தியாகம் செய்கின்றோம்
நீங்கள் உடல் நலம் பெற்றிடவே ..
எங்களின் உன்னதம் தெரியாமல்
எம்மை வேரறுக்கத்துணிந்துவிட்ட
ஆறறிவு மாந்தர்களே
உங்களைப்போல் சுயநலம்
எங்களுக்குள் இருந்ததில்லை
எந்த ஒரு மரம் செடிகொடியும்
தான் உண்பதற்காக வேண்டி
உற்பத்தி செய்வதில்லை
காயையும் கனியையும்..!
எதிர்காலத்தில் எங்கள் இன
வாழ்வுக்கென்று எதையும் நாங்கள்
சேமித்து வைப்பதில்லை..
உங்கள் இனம் வாழ்வதற்கு
எங்களையாவுது விட்டுவையுங்கள்
ஒரு மரத்தின் மரணத்தில்
நூறு மனிதனின் கல்லறைகள்
திறக்கப்படுகின்றன என்பதை
மறந்துவிடாதீர்கள் ,..
உங்கள் சந்ததிக்கு
காசு பணம் மட்டும் வாழ்வைத் தந்திடாது
தூய்மையான காற்றை
விட்டுச்செல்லுங்கள் ..
கோட்டைக்கொதலங்களைவிட நல்ல
குடிநீரை விட்டுச்செல்லுங்கள்
தங்க நகைகளைவிட
தானிய வகைகளை விட்டுச்செல்லுங்கள்..!
எல்லாவற்றுக்கும் மேலாக
இயற்கையை
இயற்கையாகவே விட்டுச்செல்லுங்கள்..!!

எழுதியவர் : அசோகன் (2-Apr-14, 9:35 pm)
பார்வை : 75

மேலே