+புத்தம்புது ரோசா போல சிரிச்சிருந்தாளே+

தண்ணி கிடக்கற கொளத்துல - நல்ல
தாழம் பூவு நெறத்துல - கூந்தல்
மட்டும் கொஞ்சம் கருப்புல
நின்னுருந்தாலே தேவதை
புத்தம்புது ரோசா போல சிரிச்சிருந்தாளே - அவ
சீக்கிரத்துல என் மனச பரிச்சுப்புட்டாளே
பாட்டுப்பாட மட்டும் கொஞ்சம் மனசதந்தாளே - நான்
பாடப்பாட எனக்கு அவ கவி கொடுத்தாளே
நான் கண்ணு நெறைஞ்சு பாட
அவ என் கண்ணுக்குள்ளே ஆட
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் (தண்ணி..)
மாலை நேர தென்றலாகி மயக்கம்தந்தாளே - நான்
மயங்க மயங்க பக்கம்வர தயங்கிநின்னாளே
தெம்மாங்கு பாட்டப்போல இனிமை தந்தாளே - என்
இதயத்தில் மல்லிகையா பூத் திருந்தாளே
நான் அழகு அவளின் ஓரம்
இப்ப எனக்கு நல்ல நேரம்
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் (தண்ணி..)
குறிப்பு: எழுதிய நாள் 30 மே 1997