முகவரி ஹைபுன்

முகவரி…..!! { ஹைபுன் }
*
தெருவில் யாரோ ஒருத்தர் முகவரி தெரியாமல்
விசாரித்துக் கொண்டிருந்தார். அங்கு நின்றிருந்தவர்
அவரிடம் இருந்த அட்டையை வாங்கிப் பார்த்தார்.
” நீங்க தெரு மாறி வந்துள்ளீர்கள் “ என்றார் அவர்.
“ இந்த முகவரி எங்கிருக்கிறது” என்று மீண்டும் விசாரித்தார்
வந்த மனிதர். அகன்ற தெருக்கள், வீட்டு எண்கள்,பெயர் பலகைகள்
தமிழ் ஆங்கிலத்தில் இருக்கின்றன. என்னதான் படித்தவர்கள்
படித்தும் படிக்காதவர்கள் படிக்காமலும் இருந்தாலும்
எவரையேனும் கேட்டுத்தான் தேடியலைந்துக் கண்டுப்
பிடிக்க வேண்டியிருக்கிறது.முகவரி.
*
முகவரி எப்படித் தெரியும்?
வேடந்தாங்கல் எப்படி வந்தது?
வெளி நாட்டுப் பறவைகள்.
*..

எழுதியவர் : ந.க.துறைவன் (3-Apr-14, 3:22 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 91

மேலே