தாய்க்கு ஒரு தாலாட்டு
அந்த தாய்
மழையைக் கூட திட்டுவாள்
மகன் நனைந்தால்...
**************
வாய் வலிக்க திட்டினாலும்
மனம் வலிக்க வருத்தப்படுவது
தாய் மட்டுமே....
*******************
சொர்க்கம்
மண்ணிலும் இருக்கிறது
தாய் மடியில்....
*********************
தாய் தவறாமல்
தெய்வத்திடம் வேண்டுவாள்
குடும்பத்தின் ஆசை நிறைவேறுவதற்கு...
*****************
பிள்ளைகளுக்கென்றே
சில்லரைகளை சேமிக்கும்
ஏழை தாயின் முந்தாணி...
******************