எப்போது

என் அருகில் நீ அமர்ந்து
உன் முகம் கண்டு
நான் உணவுண்பது எப்போது ?

உன் மார்போடு எனை
நீ அணைக்க
எனை மறந்து நான்
உறங்குவது எப்போது?

உன் கரம் பிடித்தே
வீதி உலா
நான் வருவது எப்போது?

உன் நிழலில்
என் நிழல்
இணைவது எப்போது?

உன்னில் நான்
உலக சுகம்
உணர்வது எப்போது?

உன் எச்சில் சுவை நான் கண்டு
என் எச்சில் சுவை
நீ அறிவது எப்போது?

உன் கட்டில்
என் படுக்கையாய்
நான் உணர்வது எப்போது?

காத்து கிடக்கிறேன்
காலம் எப்போது வரும் என்று?

"அம்மா.......!"

இதை நான் உரைக்க
நீ கேட்டதுண்டா....?
வேலைக்கு செல்கிறாய் நீ
எனக்காக
காத்துக்கொண்டே இருக்கிறேன் நான்
உனக்காக......!

எழுதியவர் : ஏஞ்சல் (4-Apr-14, 5:29 pm)
Tanglish : eppothu
பார்வை : 144

மேலே