விட்ட பொறுமைதனை எல்லாம்

சுற்றி சுற்றி வருகிறாய்..
உன்னை நான் தீண்டும் போதெல்லாம்..
சுற்றில் என்னை விடுகிறாய்..
உன்னை நான் திட்டும் போதெல்லாம்..

இன்பத்தையும் துன்பத்தையும்..
மாறி மாறி தருகிறாய்..
ஒவ்வொரு நொடி பொழுதிலும்..

போர்க்களம் கூட்டி சென்று..
பொறுமையை எனக்கு சொல்லி தருகிறாய்..

பல பேர் உனக்காக தவம் இருக்க..
சில நொடிகள் தரிசனம் தருகிறாய்..

கைக்கு எட்டியது.. எந்தன்
கண்களுக்கு எட்ட வில்லையடி..

அடியே IRCTC..
அடுத்த ஜென்மத்தில் நீ
என் மனைவியாக வரவேண்டும்..

விட்ட பொறுமைதனை எல்லாம்..
எருமை போல் உன்னை மிதித்து..

என் மனம் ஆற்ற வேண்டும்!!

எழுதியவர் : ராஜ்காந்த் (4-Apr-14, 5:59 pm)
சேர்த்தது : rajkanth
பார்வை : 182

மேலே