நகைச்சுவை 094

ஒரு புகழ் பெற்ற பேராசிரியர் ஒரு நாள் இரயிலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். அவரைப் பற்றிய செய்திகள் நாடேளுகளிலும் தொலைக்காட்சிகளிலும் அடிக்கடி வரும். எனவே, அவரை அறியாதவர்கள் எவரும் இல்லை எனச் சொல்லலாம். அந்தப் பேராசிரியர் மறதிக்கு புகழ் பெற்ற பேராசிரியர்.

அவர் அருகில் பயணச் சீட்டு பரிசோதகர் வந்து, பயணச்சீட்டைக் கேட்க, அவர் அங்கும் இங்கும் தேடிக்கொண்டிருந்தார். ஆனால் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. அதைக் கண்டு பரிசோதகர் அவரிடம் மிகவும் பணிவாக, சார் .. பதட்டப்படாமல் தேடிப்பாருங்க. நான் மீண்டும் வருகிறேன் என்று சொல்லி மற்ற பயணிகளிடம் பரிசோதனை செய்து விட்டு, சற்று நேரம் சென்றபின் பேராசிரியரிடம் வந்தார். அப்பொழுதும் அவரால் பயணச்சீட்டை எங்கு வைத்தார் என்று தெரியாமல் முழித்தார். அப்பொழுது பரிசோதகர் அவரிடம், ஐயா.. நீங்கள் மிகவும் நல்லவர். கட்டாயமாக பயணச்சீட்டு எடுத்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும் என்று சொல்லவும், பேராசிரியர், "பயணச்சீட்டு கிடைத்தால் தான் நான் இறங்க வேண்டிய இடம் எது என்று எனக்குத் தெரியவரும்" என்றார்.

எழுதியவர் : (4-Apr-14, 8:08 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 187

சிறந்த நகைச்சுவைகள்

மேலே