உன்னாலே..................

அதிகாலை நிலவே
அழகான கனவே
உன்னை மட்டும் காணும்
காதல் கண்கள் வேண்டும்.
உன்னிடம் நானும் கேட்டனே
என்னை தாண்டி
நீ போகும் போது
வார்த்தையில்லா
ஒரு கவிதை தோன்றும்
உந்தன் பின்னால்
நானும் வந்திடவே
எந்தன் நெஞ்சம்
தினம் ஆசைபடும்.
இது நியாயமா?
பெண்ணே நீ செய்த மாயமா?
உன்னை நெருங்கி
பேச வருவேன்
உன்னை பார்த்தும்
பேசாமல் நிற்பேன்
வார்த்தைகள் இன்றி
தனித்து போனேன்
உன்னை நினைத்து
உருகி போனேன்
உலகம் முழுவதும்
வெறுமையாய் தோன்றுதே தோன்றுதே...........
இது நியாயமா?-
பெண்ணே நீ செய்த மாயமா?

எழுதியவர் : anton (23-Feb-11, 3:40 pm)
சேர்த்தது : anton
Tanglish : unnale
பார்வை : 336

மேலே