தாய் மொழி

எனக்கு பேச
மிகவும் பிடித்தவள்
கற்க ஆசையூட்டியவள்
மொழிகளை கற்றுதந்த
அவள் ஓர் மொழி
அவள் எங்களுக்கு தாயானவள்
மௌனமாய் மனதில் நுழைந்தவள்
பிறர் மனதை கவர்ந்தவள்
அவளை பேசுகையில்
ஓர் அமைதி
என்ன மாயம் செய்தாளோ
என் தாயான தாய்மொழி
" தமிழ் வாழ்க "

எழுதியவர் : ர. மெர்சி நான்சி (5-Apr-14, 12:17 am)
Tanglish : thaay mozhi
பார்வை : 1742

மேலே