பெண்ணழகின் பயன்கள் - சிஎம்ஜேசு

மங்கையின் அழகு
மதியை சுருதி கூட்டுகிறது

வாழ்வின் விதியை மாற்றுகிறது
வையத்தில் இன்பத்தை அளிக்கிறது

காதலை பெருக்கி
மோதலை தவிர்க்கிறது

சாதலை மறந்து
வாழ்தலை தூண்டுகிறது

ஒழுக்கத்தை தந்து
சமூகத்தை உயர்த்துகிறது

கள்வனை கணிந்தவனாக்கி
கொல்பவனை குணம் நிறைந்தவனாக்குகிறது

உலகை விரிவாக்க
உயிர் நாடியை தூண்டுகிறது

அழகே உன்னால் சரிவை சந்திக்கவில்லை
வாழ்வின் உயர்வை சிந்திக்கிறேன்

எழுதியவர் : சி .எம் .ஜேசு (6-Apr-14, 7:46 am)
பார்வை : 83

மேலே