விந்தை விதை

இருளின் அந்தகாரத்தில்
ஆழ்ந்திருந்த இரவில்
மோகன ஒளிதீட்ட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது
ரெண்டுங்கெட்ட நிலா
அடிவானில் மறுபுறத்தில்
கதிரவனின் சிவப்புக் குழம்பு இன்னும்
கொஞ்சம் மிச்சமுண்டு.
வழியில் பசு மாட்டை சில
விந்தை விதைகளுக்கு
விற்கிறான் சிறுவன் ஒருவன்
ஜன்னல் வழியே இரவு அதை
தூக்கி எறிய,
அதிகாலை பார்த்தால், வளர்ந்து
அண்ட சராசரத்தையும்
அளக்கிறது விதை
விநோதமாய்!
நீ கூட அது போல்தான்
வினோத விதை .
கிடைத்த உன்னை
கீழே போட்டுவிட்டேன். மறுநாளே
விநோதமாய் விந்தையாய்
வளர்ந்துவிட்டாய்
வானத்துக்கும் பூமிக்குமாய்
என்மனதில்!
சிறுவனுக்காவது கொடியின் முடி தெரிந்தது.
ஆனால் எனக்கு ?
இதோ இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம் என்று
ஏற ஏற ...
மூச்சு முட்ட, கால்கள் தடுமாற
கைகள் ஓய, பார்வைகள் பரிதவிக்க
மேலே ஏறிவருகிறேன்
முடிவு ஓர் கானல் நீராய்
நிழலாய் வேற்று பிம்பமாய் இருக்க
நம்பிக்கை சிறகு வீசி நான்
நடந்து வருகிறேன்
மேலே வந்த பின்னாவது
கைதூக்கி எனை சேர்த்தணைப்பாயா?

எழுதியவர் : நேத்ரா (6-Apr-14, 7:18 am)
Tanglish : vinthai vaithai
பார்வை : 71

மேலே