புரிவது போல் வாழ்க்கை----அஹமது அலி----

புரிவது போல்
வாழ்க்கை
புரிந்தும் புரியாமல்
தொடர்கிறது வேட்கை!
000
தேடித் தேடி
தேடியே தொலைகிறேன்
கூடி வர மறுக்கிறது
குறுநகையும்!
000
வாழ்க்கையை
தேர்ந்தெடுத்தாலும்
வாழ்க்கை
தேர்ந்தெடுத்தாலும்
முடிவு பிழை
உணர்வு கொலை!
000
மீண்டு விட்டதாய்
நினைத்து முடிக்கும் முன்
மாண்டு விட்டதாய்
உணர்வு!
000
நிழலும்
விழ மறுக்கிறது
விழுந்தாலும்
விலகியே நடக்கிறது!
000
விரக்தியில்
விளையாடிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை

வெற்றிகள் எதார்த்தமாய்
தோல்விகள் எப்போதுமாய்
000
நீடித்த
வாழ்க்கைப் பயணத்தில்
சில நோவுகள் மனதில்
வேகத்தடைகளாக...

மருந்தில்லை....

நோவுகளே
நோய் தீர்க்கும்
மருந்தாக..!
000
சில புரிதல்கள் அர்த்தப்படும்
சில புரிதல்கள் அர்த்தங்களுக்கு அருகே
சில புரிதல்கள் அர்த்தப்படாமலே...

இப்புரிதல்களின்
புதிர் போட்டி
புரியாத புதிர்களாய்...
000
நேற்று எதிர்பார்ப்பில்
இன்று ஏமாற்றத்தில்
நாளை ஏதேதோ மாற்றங்களில்...

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (7-Apr-14, 7:30 am)
பார்வை : 224

மேலே