நலந்தரும் விடியற்காலை

நலந்தரும் விடியற்காலை
-------------------------------------


காரிருள் அகன்றது

வானம் சிவந்தது

வெள்ளி முளைத்தது

விடியலும் வந்தது

ஆதவன் எழுந்தான்

குணதிசை வந்தடைந்தான்

அல்லி குவிந்திட

குமுதம் மலர்ந்தன

குயில்கள் கூவின

காகங்கள் கறைந்தன

சேவல் கூவிட

முருகன் கோவில்

மணியோசை கேட்டது

வேத கோஷங்கள்

காதில் வந்தொலித்தது

விடியர்க் காலை

விடத்தையும் முறிக்கும்

விண்ணவர் நேரம்

அதை நாடி

வெற்றி நடை போடு

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (7-Apr-14, 9:37 am)
பார்வை : 66

மேலே