பாராமுகம்

பாரா முகம்
உடைந்த நிலவு
உதிர்ந்து மண்ணில் வீழ்தல் போலே
மலர்ந்த மலரிதழ்
உதிர்ந்து காற்றில் பறத்தல் போலே
எனைக் கண்டதும் அவிழ்ந்தது உன் மென்சிரிப்பு
கைக்குட்டையில் மறைக்கிறாய் அதை
முழுசாய் சிரித்தால்தான் என்ன
குறைந்தா போய்விடும்

உயிர்கொல்லி சிரிப்பல்லவோ அது!
நான் செத்து விடுவேன் என்றோ
சிரிப்பை மறைத்தாய்

வந்தாரை வாழவைக்கும்
தமிழகத்துப் பெண்ணா இவள் ?!
கண்டதும் கலங்குகிறாளே
அங்கி ஒடுங்குகிறாளே
நான் விருந்தினன்கூட இல்லையே
வீட்டுக் காரன்தானே
வீம்பெதற்கு !?

எழுதியவர் : நேத்ரா (7-Apr-14, 6:33 am)
Tanglish : paraamugam
பார்வை : 73

மேலே