என் தோழியின் பாசம்
என் உணர்வுகளுக்கு அழகாய் மணியாரம் சூட்டியவள்
நான் தனிமையை உணர்ந்த போது ஒரு சகோதரியாய் என் நிழலுக்கும் துணையாய் வந்தவள்
"பாசத்தால் மட்டுமே கவிதை எழுத முடியும்..
வார்த்தைகளால் அதற்கு உயிர் கொடுத்து
அன்பினால் அதற்கு ஒளி கொடுத்து"
என்று சொல்லி புதிதாய் என் கவிதைக்கு அர்த்தம் கொடுத்தவள்
மிக விரைவில் என் மனதில் இடம் பிடித்தவள்
என் தோழியின் பாசம் அதில் தாய்மையை உணர்ந்தேன்...