பாண்டுரங்கா பாண்டு பாண்டுரங்கா

என்னதவம் யான்செய்தேன்
பாண்டுரங்கனவன் காட்சிகாண
கண்ணைவிட்டு இன்னும் நீங்கவில்லை
சொல்லிப் பாடிட வார்த்தையில்லை!!!
விண்ணொத்த நிறத்தினனை
விழிநிறையக் கண்டேனே
என்சொல்வேன் அக்காட்சிதனை
என் இன்னலெல்லாம் தீர்ந்ததுவே!!!
எனைமறந்து நானும் நிற்க
இன்பமென்னுள்ளே கூடியதே
தரைமறந்து கால் பறக்க
மனம்துள்ளி துள்ளி யாடியதே!!!
பாண்டுரங்கனை கண்ட போதினிலே
பொங்கி வழியுது ஆனந்தமே
பாட்டோடு ஆட்டமும் சேர்ந்திடுதே
விட்டலவன் பேர் சொல்லி கொண்டாடிதே!!!
பாண்டு ரங்கா.. பாண்டு பாண்டுரங்கா....
விட்டல... விட்டல பாண்டுரங்கா
பாண்டுரங்கா.. பாண்டு பாண்டுரங்கா....
விட்டல... விட்டல பாண்டுரங்கா!!!
பண்டரி உறை நாயகன் நீ
பாற்கடல்வாச பரந்தாமனும் நீ
ஆயர்பாடி ராதை காதலன் நீ
என்நெஞ்சுறை தெய்வமும் நீ!!!
ஆயர் குலத்தவர் மழை துன்பம் கண்டு
கோவர்த்தன மலை குடையாக்கியவன்
நர்த்தனங்களவன் ஆடியவன்
அந்த காளிங்கனை பலியாக்கியவன்!!!
கருணை உள்ளங்கொண்ட கார்வண்ணனவன்
என் எண்ணத்தில் வண்ணங்கள் கூட்டுபவன்
குழலூதியே கானங்கள் பாடுபவன்
அந்த கானத்தில் ஆவினம் கட்டுபவன்!!!
நீண்ட நெடுநாளைய தவமொன்று
நிறை வேறியதே மாயவன் அருள்கொண்டு
கண்டு வந்தேன் சுவாமி தரிசனங்கள்
பாடிவைப்பேன் நாதனின் கீர்த்தனங்கள்!!!
பாண்டு ரங்கா.. பாண்டு பாண்டுரங்கா....
விட்டல... விட்டல பாண்டுரங்கா
பாண்டு ரங்கா.. பாண்டு பாண்டுரங்கா....
விட்டல... விட்டல பாண்டுரங்கா!!!