அஃறிணை ஆயினும் உயர்திணையே

தன்னை எரித்து
இருளை அகற்றும் மெழுகே
எங்கள் இருளை அகற்ற
நீயும் அரசியல் வரக்கூடாதா.....?

நான் போட்ட
ஒரு எலும்புத்துண்டுக்கு
என் பாதம்சுற்றும் என் வீட்டு நாயே
உன் நன்றியை அனைவரும் அறிய
நீயும் அரசியல் வரக்கூடாதா.....?

எச்சம் என்றாலும்
தன் இனிய உறவுகளை
இடைவிடாது அழைத்து உண்ணும்
என் வேப்ப மர காகமே
உன்னிடம் இருப்பதை கொடுக்க
நீயும் அரசியல் வரக்கூடாதா.....?

ஏழை பணக்காரன்
படித்தவன் பாமரன்
என்று பாராது சமமாய் டெங்கு பரப்பும்
என் இனிய இரவுத்தோளா நுளம்பே
அகிலத்தில் சமத்துவம் பரப்ப
நீயும் அரசியல் வரக்கூடாதா.....?

ஒருநாள் வாழ்வாயினும்
முகம் சுழிக்காமல் மணம் வீசும்
என் வீட்டு முற்ற முல்லையே
உலகம் வாழ்வின் தத்துவம் அறிய
நீயும் அரசியல் வரக்கூடாதா.....?

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (8-Apr-14, 9:22 am)
பார்வை : 98

மேலே