வனங்களை அழிக்காதே மனிதா 555
மனிதா...
நீ இயற்கையை
ரசிக்கிறாய்...
தென்றலை சுவாசிகிறாய்
உயிர் வாழ...
வான் மழை
இல்லை என்றால்...
இயற்கையை வசை
பாடுகிறாய்...
நீ துண்டு துண்டாய்
வெட்டிய போதும்...
உனக்காகவே பயனாய்...
கிளைக்கரம் நீட்டி
உன்னை அருகில்
அழைக்கும் போது...
தாயாக...
சில்லென தென்றலை வீசி
உன்னை தாழும் போது...
உன் பிரியமான
காதலியாய்{மனைவியாய்}...
மலர்களையும்
கனிகளையும் தந்து...
உன்னை குதுகலம்
படுத்தும் போது...
உன் மழலையின் எச்சில்
வழியும் புன்னகை அல்லவா...!
உன்னால் உன் உறவுகளை
கொலைசெய்ய முடியுமா...!
இனியும் வனங்களை
அழிக்கும் எண்ணங்களை
நிறுத்திவிடு மனிதா.....!