கொலைகார உலகமே

கொடுமைகள் புரிந்திடும்
கொலைகார மனிதனே
கூறுகள் போடுவாய்
மனித உடல்களை ......

மனிதத்தை மறந்திட்ட
மானிட பேய்களே
மதம்தன்னை வளர்த்திட
ரத்தத்தின் ஈரமோ .......

இறைவனின் பெயரிலே
புனித கொலைகளோ
இறக்கம் மறந்த
அரக்க பிறவியே ......

உணர்வுகள் கொன்றிட்டு
உடல்கள் சிதறியே
அழுகுரல் மீதுதானா
உங்கள் அஸ்திவாரம்.......

காலனின் தூதனே
கபட்டு மனிதனே
எந்த இனத்திற்காக
இந்த போராட்டம் .......

எல்லைகள் என்றும் இனம் என்றும்
மதம் என்றும் சாதி என்றும்
உனக்குள்ளே உன்னை
நீ பகைத்துக்கொன்றுக்கிறாய்

இறக்கம் மறந்த
இனக்கொளையாளியே
உனக்கு மன்னிப்பே கிடையாது
மானிட தர்மப்படி ......

சாத்தானின் கொள்கைகளை
சத்தியத்தின் கொகையாய்
மாற்றிவிட்டாயே
நாடக மனிதா .......

நாளை உனக்கும் காத்திருக்கிறது
ஓர் துயரத்தின் வலி
ஆம் மனிதா
அன்று உணர்வாய் வன்முறையின் வலிதன்னை..

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Apr-14, 5:44 pm)
பார்வை : 92

மேலே