எந்திர விசை ஊஞ்சல் குழந்தைப்பாடல்

எந்திர விசை.

ஊஞ்சல் ஏறிக் குந்துவேன்.
ஊன்றிக் காலைத் தரையிலே
உதைத்து முன்னே உந்துவேன்.

உந்து விசை தள்ளுது.
ஊஞ்சல் முன்னே செல்லுது.
ஒரு முனையில் திரும்புது.

அப்பா இழுத்து விடுகிறார்
அந்த விசையில் ஓடுது.
அழகு ஊஞ்சல் ஆடுது.

ஆடி ஆடித் தானாவே
ஆடும் வேகம் குறையுது
ஆட்டச் சொல்லி நிக்கிது.

தள்ளு விசை முன்னேயும்
ஈர்ப்பு விசை பின்னேயும்.
அள்ளும் ஆசை ஊஞ்சலாம்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (9-Apr-14, 12:00 am)
பார்வை : 233

மேலே