மழையே வா குழந்தைப்பாடல்

மழையே வா!
மழையே மழையே வா மழையே!
மண்ணில் ஈரம் செய் மழையே!
விளையும் நிலத்தை சேறாக்கு
உழைக்கும் மனிதற்கு சோறாக்கு.
கோடி கோடிக் கால் கொண்டு
ஓடி ஓடி ஆடு மழை!
வாடி வறண்ட நதிகளே!
வாய்க்கால் களாலே ஓடுங்கள்.
வானில் மிதக்கும் மேகங்களே
வீணில் சுமக்கும் நீராவியை
கானில் குளிர்ந்து கொட்டுங்கள்.
மாநிலம் செழிக்கச் செய்யுங்கள்.
கைகள் கோர்த்து ஆடலாம்
கலந்து பரந்து ஓடலாம் `
கடலில் விழுந்து முடியாமல்
படர்ந்து பசுமை நிறைக்கலாம்.
மழையே மழையே வா மழையே!
மண்ணில் ஈரம் செய் மழையே!
விளையும் நிலத்தை சேறாக்கு
உழைக்கும் மனிதற்கு சோறாக்கு.
கொ.பெ.பி.அய்யா.