​தேயிலை தோட்டத்திலே தேர்உலா ​

தேயிலை பறித்தே தேய்ந்திடும் தேகங்கள்
தேனீரை பருகிடவே உருகிடும் உள்ளங்கள் ​!

சுகம்தரும் தேனீருக்கு சுமைதாங்கும் உயிர்கள்
சுழலும் உலகத்தில் சுழன்று உழைப்பவர்கள் !

அருந்துபவர் அகிலத்தில் சோர்ந்திடாமல் இருக்க
அயராமால் விரைந்து செயலாற்றும் இதயங்கள் !

உணவே தேனீர்தான் பலருக்கு உலகத்தில்
உவகைப் பெருக்கே தடையின்றி கிடைத்தால் !

அரும்பசி ஆனாலும் அவர்கள் தேனீரை
அமிர்தமாய் அருந்துவர் ஆனந்தமுடனே !

தேனீர்இல்லா தேசம்தான் உலகில் உண்டோ
தேமதுர இசைபோல உணர்வூட்டும் அன்றோ !

தேயிலை தோட்டத்தில் தேர்உலா வந்தால்
தேகமும் சிறக்கும் தெளிவும் பிறந்திடுமே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Apr-14, 8:36 am)
பார்வை : 1830

மேலே