மாந்தர் போல் மழையே
சொட்டுச் சொட்டாய் முத்தம் பதித்தென்
நறுமணமெனக்கே காட்டிட்டாய்...
ஊன் துளைத் - தென்னுடல்
வல்லினம் மெல்லினமாக்கிட்டாய்...
அனலென் மேனியை அடக்கிய களவியில்
தந்தேன் பசுமையை நம் சேயாய்!
தனைக் கொடுத்தவள் மறந்து, பெற்றதும் மறந்து
சடுதியில் மறைந்தாய் மழையே நீயும்.
மாந்தரைப் போல!!!