தீ ஜோராக எரிந்தது

கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்பார்கள்.

இந்தவேலை வேண்டான்டா விட்டுடு வேற ஏதாவது வேலை பாரேன் என்ற அம்மாவின் பேச்சை எப்போதும் போல் காதில் வாங்காமல் சென்றுவிட்டான்...

முதலாலிக்கு விசுவாசமாய் அடியால் வேலைக்கு சென்றுவிட்டான்.

நன்றாக படித்த இளைஞன் தான் வேலை கிடைக்காத விரக்தியில் வீம்புக்கென்றே

சென்றவேலையிது இப்போது அவனே வெளியில் வந்தாலும் அது அவனை
விடுவதாக இல்லை.

கம்பீரமான தோற்றம் கட்டுக்கோப்பான உடல் அடர்ந்த கேசம் பெண்கள் பார்த்தவுடன் மயங்கக்கூடிய விழிகள் உதட்டின் புன்னகைகூட ஓராயிரம் கதை
சொல்லும் பார்தவுடன் மயங்கக்கூடிய பளிங்குசிலைபோன்ற அழகான வாலிபன்...
அவன் சுற்றுப்புறத்திற்கென்னவோ நல்லவந்தான்.

வேண்டாதவர்களுக்கு மட்டுமே கெட்டவன்.

எத்தனையோ குடும்பங்கள் இவனால் அழிந்து போயிருக்கின்றன.

எத்தனையோ குடும்பங்கள் இவனால் வாழ்ந்தும் இருக்கின்றன.


பக்கத்து வீட்டு லலிதா மாட்டுக்கு தீனி வைத்துக்கொண்டு இருந்தாள்
விசிலடித்துக்கொண்டு அவளை கேலி செய்து கொண்டு இருந்தான்...

அவனை அவள் கவணிக்காமல் உள்ளே செல்ல முற்பட்டபோது
அய்யோ அம்மா என்று அலறினான் என்னாச்சு என்று ஓடி வந்தாள் லலிதா.

ம்.... அம்மணி என்ன கண்டுக்காம போனதன் காரணம் என்னவோ என்றான்
இரண்டு பேர் வீட்லயும் ஆளில்லைன்னு தெரியும்ல அப்புறம் என்ன வீம்பு
இப்படி பக்கத்துல வாடி என்று செல்லமாக கோபம் கொண்டவன் போல் பாவனை செய்தான்.

அவனை பார்வையால் படம் பிடித்தவல் பின்ன என்ன நானும் எத்தனை தடவ சொல்றது இந்த வேலைய விடுன்னு கேட்டா என்னடா தடியா என்றால்
போச்சுடா காலையில உங்கமாமியார் இந்த புராணம் பாடினாங்க இப்ப நீயா
என்றான் எரிச்சலாக..

அவளது முகம் சட்டென மாற அதை புரிந்து கொண்டவன் அவளை தன் ப‌க்கம்
இழுத்து அவள் கையில் ஒரு சாவிகொத்தை கொடுத்தான்.


புதிதாக கார்வாங்கி இருக்கேன் இனிமேல் கார் டிராவல்ஸ்தான் போதுமா மேடம்
என்றான்.

அவன் கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் அவனின் கன்னத்தில் அவளது இதழை பதித்து விட்டு சென்று விட்டாள்.

மறு நாள் காலையில் இருந்து அவனை காண‌வில்லை.

அவன் தம்பி மூலமாக வெளியூர் சென்றிருப்பதாக அறிந்தால்.

மாலை ஊரில் இருந்து வரும்போது எதிர்பாராதவிதமாக அவன் கார் விபத்துக்குள்ளாக அந்த இடத்திலேயே லலிதா என்று உலகத்தை விட்டு பிரிந்தான்.

செய்திகேட்ட லலிதா மயங்கி சரிந்தவள்தான் எழுந்திரிக்கவே இல்லை
அவளது பெற்றோர் விஷயம் போலிசுக்கு தெரிந்தால் கேள்விகள் அதிகம் வரும்
என்று சொல்லி வேகவேகமாக தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர்...

தகனத்தில் அவளது தேகம் கொஞ்சமும் தீப்பற்றவே இல்லை மிகவும் போறாட்டமாக இருந்தது...

வெகு நேரம் கழித்து சகல சம்பிரதாயங்களும் முடிந்து அவனது உடல் வந்தது..............

தகனம் செய்பவர் ஒன்றும் புரியாமல் அவனது தேகத்தையும் பக்கத்தில்
வைத்து அதிலிருந்து இரண்டு விறகு எடுத்து இதில் வைத்தும் இதில் இருந்து
இரண்டு விறகு எடுத்து அதில் வைத்தும் தீ மூட்டினார்
இப்போது இரண்டும் ஜெக ஜோதியாக எரிந்தது...

எழுதியவர் : வே.புனிதாவேளாங்கண்ணி (9-Apr-14, 10:29 am)
பார்வை : 280

மேலே