காதல் அரக்கனே

காதல் அரக்கனே!!

காதலன் கரம்பிடித்து
கனவு கண்டது
காட்சியில் ஏறாமல்
கண்ணீர் மட்டுமே
கரித்து நிற்க
கானல்நீர் எனத்தெரியாமல்
கன்னியவள் மதியிழந்து
காணாமல் போவேனோ....

தன்னுயிர் மீதிலே
தாரம் நீயென
தாராளமாய் சூளுரைத்து
தனிமையில் நங்கையை
தவிக்கவிட்டு சென்றாயே
தகவுடைய மங்கையெனைநீ
தவிர்க்க - என்மனதிடம்
தகர்ந்து போவேனோ...

நல்லவன் தானெனும்
நம்பிக்கை கொன்றாய்.
நெறியெனும் போர்வைக்குள்,
நரிமுகத்தில் நின்றாய்.
நங்கைதானே என்றெண்ணி,
நிந்தனைகள் புரிந்தாய்.

நிர்க்கதியில் நிம்மதியின்றி
நிற்பாள் என்பது உன்
நினைப்பு.

நின்று கேளடா!!!,

நிமிர்ந்த நன்னடை கொள்வேன்,
நீசனே உன் நிறம் உரிப்பேன்,
நித்திலமும் நோக்கநின் நச்செடுப்பேன்.
நான் நங்கையல்ல,
நெருப்பு.

-வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (9-Apr-14, 12:03 pm)
Tanglish : kaadhal arakkane
பார்வை : 352

மேலே