கற்பனையில் ஒரு நிஜம்
![](https://eluthu.com/images/loading.gif)
மாடு இட்ட சாணியை கையில் எடுத்து கொள்.
நாட்டையே சீரழிக்கும் சாதியாக நினைத்து கொள்.
உன் என்னத்திற்கு ஏற்றபடி இரண்டு கைகளாலும் உருட்டி பந்தாக்கு.
ஏழையாயினும் பணக்காரனாயினும் மாணவர்களை பிரிவுபடுத்திய சாதியை சுவற்றில் வீசி எறி.
உன் ஐந்து விரலும் பதியும் படி அறை ஒன்று வை.
கதிரவன் பார்வையில் சாதியை காய விடு.
கதிரவன் மறைந்தபின் சுவற்றில் இருந்த சாதியை பேற்று எடு அது வரட்டி ஆகட்டும்.
அரசியல் என்னும் கொசுவை விரட்ட, காதலர்களை வாழவிடாத சாதியை கொள்ளி இடு.
விடியும் வரை நிம்மதியாய் உறங்கு,
விடியற்காலை சாம்பலாய் மாறிய சாதியை வாயில் போட்டு கொள்.
பற்களுக்கு உரம் போட்டு தேய்த்து எச்சிலாய் துப்பு.
மற்றவர்கள் அதை பார்த்து நம் பாதம் கூட பதிய கூடாதென நினைத்து கேவலமாக சாதியை பார்த்து ஒதுங்கி போகட்டும்.
இப்படியாவது இவ்வுலகில் சாதி அழியட்டும்.