நகங்கள்

திரிசூலம் கொண்டது
மூன்று முனை..
கைவிரல் கொண்டதோ
பத்து கூர்முனை...
ஆயுதமில்லா
ஆபத்தில்
காக்க முளைத்த
கர்ண கவசம்....
எடுத்த பின்னும்
குறையாதுயரும்
அட்சய ஆயுதம்.

எழுதியவர் : ஏஞ்சல் (10-Apr-14, 5:12 pm)
சேர்த்தது : ஏஞ்சல்
Tanglish : nakankal
பார்வை : 572

மேலே